Thursday, October 16, 2008

சொர்க்கம் - அன்றும், இன்றும்.





அன்று.

காற்றின் ஈரத்தில் நனைந்தேன்,
முழங்கால் வரைத்தண்ணீரில் நடந்தேன் !
மழை துளிகளை,
தேன் துளிகளாக ருசித்தேன் !

சேறு சிதற,
உடல் ஊற,
ஓடி விளையாடினேன் !

கால்கள் கடுத்தபின்,
காலத்தை கடக்க,
நடந்தே சென்றேன்,
மழையில் !

இன்று.

வெளிச்சம் நிறைந்த அறையில்,
மழை பெய்ததே தெரியாத நிலையில்,
கணிப்பொறி முன்
கண்களை கசக்கிக்கொண்டு,
காலத்தை வெல்ல முடியாது
என அறிந்த பின்
தங்கத்தை சேர்த்துக்கொண்டு,
இவ்வுலகம் தான்
சொர்கமென்பதை மறந்து,
வானவில்லை காண நேரம் இல்லாமல்
வில்லாய் வளைந்து, உழைத்து,
மண்வாசனை மறந்து
இன்பமதை நாமே கொன்று,
இன்னும் ஒரு முறை
பூமி சொர்கமானபோது,
எதையோ தேடி,
கணிபொறி முன்
காலம் கடந்து போகிறது
பூமி சொர்க்கமானதை அறியாமலே! !

- இராபர்ட் வில்லியம்ஸ்

புகைப்படம் - இராபர்ட் வில்லியம்ஸ்
இடம் - கொல்லி மலை

2 comments:

Sri said...

mm..how true...reminds me of a poem 'Leisure' guess its by W.H Davies..
he says 'there is no time to stand and stare' in his poem..

good one..

Robert Williams RM said...

hmmm ... thanks!