Wednesday, May 04, 2016

பிறர்க்கென முயலுநர்!

எங்கோ ஒரு கூக்குரல்.
பலவருடங்கள் முன்னால் கேட்ட குரல் அது.
இன்று தான் மீண்டும் கேட்டேன்.
என்ன நிகழ்ந்ததோ, சென்று பார்ப்போம் எனக் கிளம்பினேன்.

மண்ணில் கால்வைத்தவுடன் கண்ட காட்சி - மனிதர்கள் வணங்கும் அனைத்து தெய்வங்களும் உதவி கேட்போருக்கு உதவ ஒவ்வொரு திசையிலும் சென்று கொண்டிருந்தனர்.

தலைவர்களுக்கான ஆடம்பர போற்றல்கள், திரைப்படங்கள், திருமணங்கள், பிறந்தாள் விழாக்கள்" சுவரை அணைத்த சுவரொட்டிகள், மாடுகளுக்கு உணவாகிக்கொண்டிருந்தன.

பிறந்தநாள் விழாக்கள் - என் பிறந்த நாள் எனக்கே நினைவில்லை. குளிர் காலமோ பணிக்காலமோ மழைக்காலமொ - நான் அறியேன்.

பல வருடங்கள் முன், நான் கழுதை மேல் ஊர்வலம் சென்றிருக்கிறேன்.

இங்கு எருமையின் மேல் கோவமாகச் சென்றுகொண்டிருந்தார் ஒருவர் - விருப்பமில்லா வேலை செய்பவரின் முகம் அது.

"ஏனப்பா இந்தக் கோபம்?" என்றேன்.

"டார்கெட் மீட் பண்ண முடியில" என்றார்.

"கையில் இருக்கும் கயிரை வலது புறம் வீசு" என்றேன்.

என்னை யார் என்று அறிந்ததால் சிறு தாமதமுமின்றி அவரும் வீசினார்.

வெறும் கயிறு தான் திரும்பி வந்தது.

எனக்கு புரியவில்லை. இந்த தந்திரம் நன்றாக தானே வேலை செய்யும்.

அவர் என்னை பார்த்து புன்னகைத்தார்.

"இந்த ஊர் அப்படி. நீங்க கவலைபடாதிங்க. நான் கிளம்புகிறேன்.தண்ணியா இருக்கு பாத்து போங்க." என்றார். மறைந்து போனார்.

மனதிற்குள் "தண்ணியா" எனச் சிரித்துக் கொண்டேன். தண்ணீருக்கும் எனக்கும் தொடர்புகள் நிறைய உண்டு.

"தம்பி இது எந்த இடம்? இந்த விலாசம் எங்கே உள்ளது?"

என்னைப் பார்த்தார் - "ஊருக்கு புதுசா? பஸ் எதும் இல்ல பத்து கிலோமீட்டர் இந்த ரோட்ல நேரா போ முடிஞ்சா லிப்ட் கேட்டு போ ரொம்ப தண்ணியா இருக்கு பாத்து போ...ஒஹ்...போங்க" பதிலும் அறிவுரையும் சொல்லியவாரே நடந்து சென்றார்.

சரி, நடை பயணம் தானே, புதிதல்ல எனக்கு என நினைத்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தேன்.

பூமிக்கு வந்தால் மணிதர்களை போல் தான் நானும், சிறு சொகுசுகளை தவிர.
பூமிக்கு வந்ததால் மணிதர்களை போல் தான் நானும், பசி யதார்த்தம் தானே.

பழம் அருந்த, அருகில் இருந்த நண்பனின் பெயர் வைத்த கடைக்குச் சென்றேன்.

திறந்திருந்த ஒரு சில கடைகளில் அதுவும் ஒன்று.

"இரு நூறு ரூபாய்" என்றார்.

"சரி ஒரு கோப்பையில் பாலாவது கொடுங்கள்" என்றேன்.

"நூறு ரூபாய்" என்றார்.

"வேண்டாமப்பா. என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. நான் பசிக்கு பழகியவன்." எனப் புன்னகைத்தே நடந்து சென்றேன். இயலாமை அவர் கண்களில்.

படகுகள் நிறைந்த வண்டிகள் சென்று கொண்டிருந்தன நான் செல்லும் திசையை நோக்கி. நிகழ்ந்ததை அறிவேன் நிகழப்போவதையும் அறிவேன் - அதைத் தவிர்ப்பதை அறியேன்.

தெய்வங்களைப் புரிந்துக்கொள்ள இன்னும் காலமாகும் மனிதர்களுக்கு.

சிறிது தூரம் நடந்த பின் ஒரு பாலம் அருகில் வந்தேன். மக்கள் கூட்டமாக நின்று பாலத்தின் மேல் செல்லும் வெள்ளத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.

"அந்த தெருல நறைய பேர அடிச்சுட்டு போய்டிச்சி"
"சின்ன கொலந்தைலாம்"
"பாவமா இருக்குபா பாக்கவே"
"கவர்மெண்ட் என்ன புடுங்குதோ தெரியல"

பரிதாபத்திலே வந்த உணர்வுகள் - வருத்தமும் கோபமும்.

அலறல் சப்தம். அங்கே சென்றேன்.

புள்ளி மானொன்று தண்ணீரில் தத்தளித்தது.

தண்ணீரில் எதோ விழுந்த சப்தம்.

சில நொடிகளில் கை ஒன்று தண்ணீரினால் மேல் - அதில் மான் சாந்தமாய்.

வரும் வழியில் சுவரொட்டிகளில் பார்த்த காட்சி அது. குழந்தையைக் காத்த அந்தப் பெண் தெய்வம் தான் இந்த மானையும் காபற்றுகிறாளென எண்ணி மகிழ்ந்துகொண்டிருகையில் - அலறல் சப்தம். அங்கே சென்றேன்.

"பாம்பு! பாம்பு!"

உதவ நினைக்கையில் எலி ஒன்று அதனோடு போராடிய காட்சி. அலறல் நின்றது.

"பாம்பு! பாம்பு!"

உதவ நினைக்கையில் மயில் ஒன்று அதைக் கவ்விச்சென்றது. அலறல் நின்றது.

எதோ தெய்வங்களால் முடிந்தது என நினைத்து மகிழ்ந்துகொண்டிருகையில் - அலறல் சப்தம். அங்கே சென்றேன்.

படகுகளில் மக்கள், தண்ணீரில் தத்தளித்த குழந்தையும் குடும்பமும்.

வெள்ளை தொப்பி போட்ட வீரன் வேகமான நீரோட்டத்தில் குதித்து குழந்தையை மட்டும் கரைசேர்த்தான்.

அவன் கரங்களில் குழந்தை.

பிஞ்சி குழந்தை.
அழகு குழந்தை.
அன்பு குழந்தை.
மாசில்லா குழந்தை.
மூச்சில்லா குழந்தை!!

வீரனும் சுற்றி இருந்த மக்களும் மனமுடைந்து போனர்.

"ஐயோ! ஐயோ!"
"எழுப்பு பா அவல எதாவது செய்யு!"
"டாக்டர் யாரவது இருகிங்களா?!!"
"பர்ஸ்ட் எய்ட் பர்ஸ்ட் எய்ட்"

குலுக்கினான். நெஞ்சை அழுத்தினான்.கரங்களையும் கால்களையும் தேய்த்தனர். வாயினில் காற்றை ஊதினான்.

இருமினாள்.
கொப்பளித்தாள்.
அம்மா என்றாள்.
அனாதை ஆனாள்.

ஆனந்தம்! ஆரவாரம்!
அதிசயம்! அற்புதம்!

இது மனிதன் தெய்வமான காலம்.

அலறல் சப்தம். அங்கே சென்றேன்.

மயான அமைதி. கல்லறைகள் இல்லா மயானத்தின் நடுவில் நின்றுக் கொண்டிருந்தேன். எருமையின் நிழல் மட்டும் பார்த்தேன்.

மழையின் சப்தம். அதில் நடந்து சென்றேன்.

சூரியன் மறைந்தான்.

ஒரு வெள்ளை பச்சை மாளிகை அருகில் சற்று ஓய்வெடுக்க நின்றேன்.

"உள்ளே வாங்க, மழைல என்ன பண்றிங்க." என்றார்.
"பரவாயில்லை சற்று நேரத்தில் கிளம்பிடுவேன்" என்றேன்.
"பரவால ப்பாதர் உள்ளே வாங்க". நானும் இணங்கினேன்.

'ப்பாதர்' என் உடையால் எனக்குக் கிடைத்த பெயர்.

"சாப்டிங்களா?"
"இல்லையப்பா"
"வாங்க" என கையைப் பிடித்து அழைத்துச் சென்றார்.

பசி அடங்கியது - இலவசமாக.
பால் அருந்தினேன் - இலவசமாக.

மனிதர்கள் அளித்த உணவு.

"இங்கே படுத்துகோங்க" என ஒரு போர்வை கொடுத்தார், உறங்க இடம் காட்டினார்.

எனக்கும் உறங்க இடம் கொடுத்தார்.
மறைபொருள்கள் சுக்குநூரானது.

நாளைப் பயணத்தை துவக்கலாமென நினைத்து உறங்கினேன் மழையின் சப்தத்தில்.
காலையில் நன்றி கூறி விடைபெற்றேன்.

நடக்க ஆரம்பித்தேன்.மழையில்லை.
நிறைய மனிதர்கள் நடமாட்டமும் இல்லை.

"இதுக்கு மேல போக கூடாது சார்" ராணுவ வீரன் ஒருவன் சொன்னான்.
அதைக் கடந்து சென்றேன்.

கவலை நிரைந்த முகம், கண்களில் நீர் தேக்கம்.
ஆடம்பர உடை, காலணிகள் இல்லை.
வேகமாக நடப்பான், சில நொடிகள் நின்று ஓய்வெடுப்பான்.
என் பயணத்திற்கு காரமனவனின் சொந்தக்காரன்.
என் காலணிகள் அவனுக்குப் பத்தாது.

"எல்லாம் சுகம் தானே தம்பி?"

"இல்லை ப்பாதர். வைப்யும் பசங்கலையும் காண்டாக்ட் பண்ண முடியல. அம்மா அப்பா தம்பி இருக்குற எடத்துக்கு போக முடியல. என்ன ஆச்சோ ஏதாச்சோனு தெரியல. நான் மழைநால இங்கேயே மாட்டிகிட்டேன். போன் வேலை செய்யல்ல. நேத்தும் மூணு கிலோமீட்டர் நடந்து வந்து பாலம் மேல தண்ணி போகுதுநு திரும்பி போய்டேன். எல்லாத்தையும் அந்த ஏரியால காப்பாதிட்டாத சொல்றாங்க. செல எடத்துல ரெண்டாவது மாடி வரைக்கும் தண்ணியாம். ஹெலிகாப்டர்ல தான் நறைய பேர காபதிருகாங்க. இருநூறு ஸ்கூல் பசங்கள என்வீட்டுக்கு பக்கதுல காபாதிருகாங்க. ரொம்ப பயமா இருக்கு ப்பாதர்." எனப் புலம்பினார் பயத்தோடு.

"ஒன்னும் ஆகாதப்பா. எல்லாம் நன்றாகிவிடும்." என்றேன்.

"நீங்க எங்க ப்பாதர்?"

"நண்பன் ஒருவன் உதவி கேட்டான். பார்க்கப் போகிறேன்."

"எந்த ஏரியா?"

இடத்தைச் சொன்னேன்.

விவரங்கள் ஏதும் கேட்காமல், "என் அப்பா அம்மா தம்பி அங்கே தான் இருக்காங்க. பாலம் மேல தண்ணி இல்லனா போலாம்" என்றார்.

"நம்பிக்கையோடு இரு தம்பி. எல்லாம் நல்லதாகவே நடக்கும்" என்றேன்.

சில நொடிகள் நின்று தன் கால்களைப் பிடித்துக்கொண்டான்.
நானும் நின்றேன். பயணம் தொடர்ந்தோம்.

"ஹெலிகாப்ட்டர்ல வந்து ஒரு ப்ரெக்னன்ட் லேடிய காப்பாத்திட்டு போயிருக்காங்க. அவங்களுக்கு ட்வின்ஸ்." என்றார் புன்னகையோடு, அவன் முகத்தில் ஒரு துளி நம்பிக்கை.

எத்தனை காலங்கள் கடந்தாலும் தெய்வங்களால் மனிதர்களைப் புரிந்துகொள்ள முடியாது.

எந்தத் துயரிலும் எதோ ஒரு மூலையில், ஒளித்துளி தெரிந்தால் நம்பிக்கையோடு மலரும் முகங்கள். இங்கே கடவுளின் வார்த்தைகளுக்கு இடம் இல்லை.

பாலம் வந்தடைந்தோம். மேலே தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. சோர்ந்து போனார் அவர். அதிகாறி ஒருவரிடம் பேசச் சென்றார். கைபேசியை வைத்துத் தன்னையும் பாலத்தையும் புகைப்படம் எடுத்தார்.

"எல்லாத்தையும் காப்பாதிட்டாங்கலாம். நேத்து சொன்னதையே சொல்றாங்க. அந்த ஏரியா ஏரி போல இருக்காம். இன்னும் அஞ்சு மணிநேரத்துல தண்ணி எரங்கிடுமாம். போய்டு நாளைக்கு தான் வரணும். ரொம்ப கவலையா இருக்கு ப்பாதர்", என்றார்.

"கவலை படாதே. நம்பிக்கையோடு இரு." என்றேன். புன்னகைக்க முயன்றார்.

"பக்கதுல இருக்க ஹோஸ்பிடல்ல நறைய பேர் எரந்துடதா சொல்றாங்க". பதில் சொல்ல வார்த்தைகளைத் தேடி நின்றேன்.

"வாங்க ப்பாதர். அந்த கடைல போய் எதாவது சாபிட்டுட்டு போலாம்" என்றார். அவர்பின் சென்றேன் அமைதியாக.

கடையில் - "இங்க மட்டும் எப்படி பவர் இருக்கு?" என வினவினார்.

"ஜெநரேடர் சார். கரன்ட் கட் அப்போ வாங்னது இப்போ யூஸ் ஆகுது" உணர்சிகள் எதுவும் இல்லா கடைக்காரர்.

தொலைக்காட்சியில் காய்ந்து போன சாலைகளைக் காட்டினர். நிவாரண பனியை ராணுவ தளபதிபோல் குழந்தயை காத்த அம்மை செயல்படுத்தி வருகிறாரென அறிவித்தனர். சரிதானே, நானே நேரில் பார்த்தேனே!

அவரும் தொலைக்காட்சியை பார்த்துகொண்டே, "அது வேற உலகம் ப்பாதர்", கிண்டலாக.

இதில் என்ன கிண்டலோ, நான் அறியேன்.

வயிர் நிறைந்தது.
பணம் அவருடையது.
பணம் தேவை.

"ப்பாதர் நான் போய்ட்டு ரெஸ்ட் எடுத்துதிட்டு நாளைக்கு வரேன். இல்லனா நடக்க முடியாது." என்றார்.

"நீங்க?"

"என் வேலை இன்னும் நிறைவேறவில்லை. நீ கவலைப்படாதே. உன் குடும்பத்திற்கு எதுவும் ஆகாது. நான் பாலத்தைக் கடப்பேன். அவர்களைக் கண்டு விசாரித்துச்செல்வேன். உன் மனைவியும் குழந்தைகளும் பத்திரமாக உள்ளனர். பயப்படதே நான் இருக்கின்றேன். நீ போய் நாளை வா - நல்லதே நடக்கும்." என்றேன்.

என்னை வியப்போடு பார்த்தார். அவர் கண்கள் திறந்தது, நான் யார் என்பதை அவர் அறிந்துகொண்டார். நான் அவறிடமிருந்து பிரிந்து செல்லும் நேரம் வந்தது. ஊமையானார், நம்பிக்கை கொண்டார்.

"வந்த வழியே செல். வலப்புறம் மூன்றாவது தெரு அங்கே சென்று காலணிகள் வாங்கிக்கொள்." என்றேன். ஊமையாகவே நின்றார். நான் அங்கிருத்து விலகினேன்.

பாலத்தை நெருங்கினேன். இன்று இதைப் பாலம் என அழைப்பது தவறு. அதிகாரிகள் தடுத்தனர். அவர்களைக் கடந்து சென்றேன். நான் தண்ணீரின் மேல் நடந்து சென்றவன். இது சிறிது பயமளித்தது. நடக்க இயலும் குழந்தைபோல் நடந்தேன் ஆற்றின் மேல். ஆற்றைக் கடந்தேன்.

"சுயநலவாதிகள்! முட்டாள்கள்! முட்டாள்களின் அலட்சியம்."

திரும்பிப் பார்த்தேன். எருமை மேல் அவன். முன் பார்த்ததை விடப் பயங்கர கோபத்துடன்.

"என்ன?" என்றேன்.

"சுயநலவாதிகள்! முட்டாள்கள்! காப்பாத்தாம ஓடி போய்ட்டான்க. இபோ டார்கெட் மேல நறைய....எனக்கு இந்த வேலை தேவையா?" என்றார்.

"உங்கள போல சிலருடைய பேர சொன்ன கொஞ்ச பேர மட்டும் விட்டுட்டேன். மத்தவங்களுக்கு எதையும் நினைக்க நேரமில்ல.ஆறு ரொம்ப சீக்கிரம் மேல வந்துடிச்சு அதால நான் அவசரமா இங்க வர வேண்டியதா போச்சி." என்றார்.

நான் குழப்பத்தோடு பார்த்தேன்.
நடந்ததை என் கண்முன்னே ஓட்டிக் காட்டினார்.

"அவசர வேலை வந்துடிச்சு. வேற எதாவது நல்ல வேலை இருந்தா சொல்லுங்க. இந்த பொழபுக்கு ....." என்றவரே, காற்றோடு போனார்.

அந்த காட்சிகளிலிருந்து என் கண்கள் விலகவில்லை.

நான் கண்ணீர்விட்டேன்.

சாந்தமுகமுடையவன் தோன்றினான்.

"ஆசை அழிவின் அடித்தளம்", என்றார்.

"உயிர் வாழ நினைப்பது ஆசையா" என்றேன்.

"எப்படி உயிர் வாழ நினைகின்றோம் என்பது இந்த ஆசை. தன்நலம் கருதா ஆசை, பிறர் நலம் கருதி செயல்படும் ஆசை - இவை உயிர் வாழ வைக்கும் ஆசைகள், இந்த உலகம் இன்னும் அழியாதிருப்பதின் காரணங்கள்." என்றார்.

"ம்ம்ம்"

"அலட்சியமும், இயலாமையும் இருக்கும் இடத்தில் நம்மால் எதுவும் செய்ய முடியாது. நீ வருத்துவதில் பயனில்லை நண்பா. நீ இராயிரம் ஆண்டுகள் முன் வேதனை பட்டபோது நான் உன் நினைவினில் ஓதிய மந்திரமே இச்சமயத்திற்கும் பொருந்தும் - இதுவும் கடந்து போகும். பயணத்தைத் தொடரு.எல்லாம் நல்லதுக்கே." கண்களை மூடினான். தோன்றியவாரே மறைந்தான்.

தெய்வங்களுக்கும் சில நேரங்களில் ஆறுதல் தேவை.

"இதுவும் கடந்து போகும். இதுவும் கடந்து போகும்." மனதிற்குள் முனுமுனுத்தேன்.

நான் அங்கேயே மரத்தடியில் அமர்ந்தேன்.

மழை இல்லை, மெல்லிய காற்று.
இலைகளால் தூறல், பறவைகளின் பாடல்.
கண்களை மூடினேன், உறங்கினேன்.

"சார்...சார்..."

கண்விழித்து பார்த்தேன், மனிதர்களின் நடமாட்டம்.
பாலத்திற்கு பல அடிகள் கீழே நீரோட்டம்.

"ப்பாதர்"

திரும்பிப் பார்த்தேன், ஒரு இளைஞ்சன்.
நெற்றியில் வெள்ளைச்சாயம்.

"இங்க ஏன் ஈரத்துல படுத்துட்டு இருக்கீங்க?"

"நண்பர்களை பார்க்கப் பயனிகின்றேன். சிறிது சோர்ந்து போனேன். ஓய்வெடுக்க அமர்ந்தேன், உறங்கிவிட்டேன்" என்றேன்.

"எங்க போகணும்?"

இடத்தைச் சொன்னேன்.

"எங்க ப்பிரெண்ட்ஸ்சோட வந்தேன் எதாவது ஹெல்ப் பண்ணலாம்னு. ரெண்டு நாள் அப்பறம் இப்போ தான் தண்ணி எரங்கிச்சு. நறையபேர் சாப்பாடு இல்லாம இருக்காங்க. சாப்பாடு எடுத்துட்டு வந்தோம்."

'சாப்பாடு' எனக் கேட்டவுடன் எனக்கும் பசிக்க ஆரம்பித்தது. தண்ணீரில் மேல் நடந்து வந்ததோ என நினைதுக்கொண்டிருகையில் "சாப்டிங்களா? ச்ச..ச்ச..சாபிடரிங்களா?..ச்ச..ச்ச.. என்கூட வாங்க சாப்பிடலாம்" என்றார்.

அமைதியாக அவனைப் பார்த்தேன், அவன் மனதிற்குள் பார்த்தேன், அதுவும் வெள்ளைதான்.

"நானும் அந்த வழியா தான் போறேன் தண்ணி இல்லனா அங்கே போகலாம். வண்டில போய்டலாம் வாங்க." என்றார். நடந்தவையை நினைத்து மிகவும் சோர்வுற்றிருந்தேன், இணங்கினேன்.

அவர்பின் வாகனத்தில் அமர்ந்தேன்.

கழுதைமேல் சென்ற பயணத்தோடு ஒப்பிட்டுப்பார்த்தால் இந்தப் பயணம் மிகக் கடினமாகவே இருந்தது.

"மழ பெஞ்சாலும் பெய்யாடாலும் இந்த ரோடு இப்படிதான் இருக்கும் ப்பாதர்." என்றார். அவர் நண்பர்களின் கூட்டத்தை அடைந்தோம்.

சிறு குழந்தைகள் முதல் வயது முதிந்தவர் வரை அனைவரும் அங்கே உணவுக்காக நின்று கொண்டிருந்தனர்.

"டேய் ப்பாதருக்கு ஒரு பொட்டலம் கொடு."

"இந்தா மச்சி."

'சாப்பாடு' ருசியாக இருந்தது.

"இங்கயே இருங்க நான் போய் வேற யாராவது இருந்தா கூட்டிட்டு வரேன். ஒன் ஹவர்ல இங்க வேலை முடிஞ்சுடும், அப்பறம் நீங்க சொன்ன எடத்துக்கு போகலாம்." என்றவாரே வாகனத்தை எடுத்துச்சென்றார்.

அருகில் :
"யார கேட்டு இங்க சாப்பாடு போடுற. தலைவர் வரட்டும். நிறுத்து டா ஏல்லாத்தையும்."
"ரெண்டாயிரம் ரூபாய் கொடுத்துட்டு வண்டிய எடு. இல்லனா இங்கயே விட்டுட்டு போ."
"டேய் இந்த வண்டில இருக்க எல்லாத்லையும் ஒட்டுங்கடா ஒன்னும் மிஸ்சாக கூடாது."

சமையம் அறிந்து பெயர் வாங்க நினைக்கும் நபர்கள். எத்தனை முறை கன்னத்தைக் காட்டினாலும் இவர்கள் அறைவார்கள்.

வாகனத்தில் மூன்று சிறுவர்களுடன் வந்தார்.

"இவங்க ஏரியாக்குள்ள போட் மட்டும் தான் இப்போ போக முடியுது. இவங்க போட்ல தான் வந்தாங்க, சாப்பாடு வாங்கிட்டு திரும்ப போகணும். நான் அவங்க வீட்ல பத்திரமா திரும்ப வீட்ல எறக்கி விடறேன்னு சொல்லி கூட்டிட்டுவந்திருகேன் சீக்கிரம் இவங்கள கவனி" என்றார் நண்பரிடம்.

இரு உணவு பொட்டலம் தான் இருந்தது. உணவைப் பிரிப்பதில் சங்கடம். என் பசி காத்திருந்திருக்கலாம். என்னால் யாரும் பசியாக இருக்க கூடாது என உணவைப் பலுகி பெருக வைப்போம் அற்புதம் செய்வோம் என எண்ணுவதற்குள், சிறுவர்களில் ஒருவன், "எனக்கு வேணாம்னா இவன்கிட்ட கொடுங்க, நான் காலைல சாப்டேன் இவன் ரெண்டு நாளா பெருசா எதும் சாப்படல, எதிர் வீடு தான்.". அங்கிருந்தோர் சிலர் கண்களில் வெள்ளம்.

உணவைப் பலுகி பெருக செய்தால் தான் அற்புதமா?

தெய்வங்களின் அற்புதங்களுக்கு இங்கு இடம் இல்லை.

"வாங்க ப்பாதர் உங்கள ட்ராப் பண்றேன்" என்றார்.

அமைதியான பயணம் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி இருந்த சாலையில் தான் அவர் முழு கவனம். வழியில் மக்கள் கூட்டமாய் இருந்தனர்.

"சினிமால நடிக்கிறவங்க கொஞ்ச பேர் ஹெல்ப் பண்றாங்க." சாலையில் தான் அவர் கண்கள் இருந்தன.

"நல்லது தம்பி."

இது நிழல்கள் நிஜமான காலம்.

என் இலக்கை வந்தடைந்தேன். தண்ணீர் முற்றிலுமாக வடிந்திருந்தது.

என் பயணத்திற்கு காரணமானவனின் குடும்பத்தினர் வீட்டின் முற்றத்தில் சேதமான பொருட்களை வைதுக்கொண்டிருன்தனர்.

சோர்வுற்ற முகங்கள், ஆனால் இது கடந்து போனது அடுத்து என்ன செய்யலாம் என்று நினைத்துகொண்டிருந்த முகங்கள்.

"அந்த ஸ்டார் மட்டும் தனியா வை. அப்பறம் யூஸ் ஆகும்".

ஆஹா, நான் பிறந்த காலம் நினைவிற்கு வந்தது!

"வாங்க ப்பாதர் டையர்ட்அஹ் இருக்கீங்க போல? சுட சுட கிச்சடி இருக்கு. இந்த பசங்க கொடுத்துட்டு போனது. வாங்க சாப்பிடுங்க. அந்த தம்பியையும் வர சொல்லுங்க" என்றார் அவன் அம்மா.

ஆம், எதுவும் கடந்து போகும்.

அவரைப் பார்த்துச் சிரித்தேன். அவரும் நடந்ததை மறந்து புன்னகைத்தார்.

என் பயணத்துக்குக் காரனமானவனிடம் உன் குடும்பம் நலம், நிம்மதியாக உறங்கு என உணர்தினேன்.

"உள்ளே வாத்தம்பி."

"பரவால்ல ப்பாதர். இருட்டுது பிரெண்ட்ஸ் கிட்ட போகணும், நாளைக்கு திரும்ப வரணும். தேடபோறான்ங்க." நான் மேலும் வற்புறுத்தவில்லை. வாகனத்தைத் திருப்பினார்.

"தம்பி உன் பெயர் என்ன?!" வாகன சப்தத்தில் அவருக்கு அது கேட்டிருக்காதோ என்னவோ.

ம்ம்ம். 'மச்சி', அவர் நண்பர் அவரை அழைத்த பெயர்.

அவர் சாலையில் திருபியவரை நின்று பார்த்தேன்.

நன்றி மச்சி.

- இராபர்ட் வில்லியம்ஸ்.


பிறர்க்கென முயலுநர்!
புறநானூறு - 182.
பாடியவர்: கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி

உண்டால் அம்ம, இவ்வுலகம்; இந்திரர்;
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்!
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்,
புகழ்எனின், உயிருங் கொடுக்குவர், பழியெனின்,
உலகுடன் பெறினும், கொள்ளலர், அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித்,
தமக்கென முயலா நோன்தாள்,
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.

Purananooru - 182
A Song Written By Kadalul Maindha Ilamperu Vazhudhi

Oh ! This world is without perishing for a long time. 
What is the reason for this ? 
The reason for its non perishing is- there are people who do not eat amudham 
which gives immortality without sharing it with others; 
Those who do not hate others and do not show anger to others;
Those who do not sleep for a long time. 
They afraid to do the deeds which are afraid by the nobles. 
They give their lives if fame comes. 
If on doing a deed which brings blame, 
they do not do it even if they get the world as a reward for that. 
They have no tiredness. 
They have such high qualities. 
They do not strain for their lives, but they strain hard for others' lives. 
Because of these people, this world is still in movement.

Tuesday, December 01, 2015

திசை மொழி அறியாது!

தமிழ்நாட்டில் மழை வெள்ளம் பாய்ந்தோடுகிறது,
எந்த திசை திரும்பினாலும்,
"உதவி உதவி" எனும் கூவும் குரல்கள்
வெறும் மூன்று திசைகளுக்கு மட்டும் தான் கேட்குமாம்.

ஏன்?

வடக்கிற்கு,
தமிழ் தெரியாதம் !

- எங்கோ ஒரு மூலையில் என்மேல் வெறுப்புடன்

Thursday, October 06, 2011

Steve Jobs
1955-2011

Wednesday, December 23, 2009

ஒரு தலைக்காதல்!



வா என்று அருகில் அழைத்தாய்.
உன்னருகில் நான் வர,
தீண்டவா வேண்டாமா
என நீ தயங்கிப் போக,
உன் தயக்கம் கண்டு நான் விரைய,
முகம் பார்த்தாய் 
சிரித்தாய்,
பாதம் தொட்டாய்
மெல்ல தழுவினாய்,
உதட்டில் முத்தமிட்டாய்
உயிரோடு கலக்கசசொன்னாய்
காதிலே 'காதல்' என்றாய் !

என்னை அள்ளிகொண்டாய்
உன்னில் மூழ்க வைத்தாய,
நிகழ்காலம் மறக்கச்செய்தாய்
உயிரின் சோகம் கரைத்தாய்,
வாழ்வின் ஏக்கம் தீர்த்தாய்
உன்னுயிர் குடிக்கச்செய்தாய்
என்னுள் சென்றாய் !

தத்தளித்தேன்,
நீந்தினேன்,
சுவாசிக்க துடித்தேன்.
உனக்காக மறித்து,
கதைகளில் வாழ ஆசை இல்லை.
விட்டு விடு அழகே
கரை சேர்த்து விடு உயிரே
நம் காதல் வாழ்வதற்கே!

மௌனம்,
பின் அலையின் ஓசை.

கரையில் மிதந்தேன்
காதில் "காதல்" என்றாய்!
என் இமை திறக்க,
நீ அலையாய்,
தழுவினாய், அன்பாய் !

கடலே
அற்புத அழகே,
உனக்கும் எனக்கும்
ஒருதலைக்காதலே உன்னதமானது !

- இராபர்ட் வில்லியம்ஸ்
புகைப் படம் : இராபர்ட் வில்லியம்ஸ்
இடம் : "சரசோடா கி" கடற்கரை, ப்ளோரிடா  

Thursday, October 16, 2008

சொர்க்கம் - அன்றும், இன்றும்.





அன்று.

காற்றின் ஈரத்தில் நனைந்தேன்,
முழங்கால் வரைத்தண்ணீரில் நடந்தேன் !
மழை துளிகளை,
தேன் துளிகளாக ருசித்தேன் !

சேறு சிதற,
உடல் ஊற,
ஓடி விளையாடினேன் !

கால்கள் கடுத்தபின்,
காலத்தை கடக்க,
நடந்தே சென்றேன்,
மழையில் !

இன்று.

வெளிச்சம் நிறைந்த அறையில்,
மழை பெய்ததே தெரியாத நிலையில்,
கணிப்பொறி முன்
கண்களை கசக்கிக்கொண்டு,
காலத்தை வெல்ல முடியாது
என அறிந்த பின்
தங்கத்தை சேர்த்துக்கொண்டு,
இவ்வுலகம் தான்
சொர்கமென்பதை மறந்து,
வானவில்லை காண நேரம் இல்லாமல்
வில்லாய் வளைந்து, உழைத்து,
மண்வாசனை மறந்து
இன்பமதை நாமே கொன்று,
இன்னும் ஒரு முறை
பூமி சொர்கமானபோது,
எதையோ தேடி,
கணிபொறி முன்
காலம் கடந்து போகிறது
பூமி சொர்க்கமானதை அறியாமலே! !

- இராபர்ட் வில்லியம்ஸ்

புகைப்படம் - இராபர்ட் வில்லியம்ஸ்
இடம் - கொல்லி மலை

Sunday, October 05, 2008

Do you believe in God?


 I started to church on a pleasant and beautiful Sunday.

My last visit to Church was 2 months ago in India. I realized that in my life I have skipped church on Sundays just less than ten times, until I was in India, for the past 27 years!

I didn’t want to lie to my mom the next time she calls me.
I didn't want to lie to her that I was going to church every Sunday.

I went for the 02:00 PM CST mass to a Church in Irving.

In India priests used to preach in their sermons that people in USA watch the Holy Mass in television and that they have no Family. When I entered the Church I knew the priest had lied. He broke the commandment “thou shall not lie” – I hope it is one of the Ten Commandments.

There were beautiful girls going around in perfect attire, which is considered atrociously improper in India. I loved it; even though I was standing inside a Holy Place I could not stop wondering about the girl in the sky blue jean and white shirt, she looked like an Angel!”. I thought it was okay and may be I scored some points in Heaven since I thought of her as an `Angel` in Gods House. I thanked God for the gift of vision!

A big fat lady, on my left, dressed as if it was her wedding, gave me a paper. I looked at it, English in it was garbled! I thought, may be, this is one of the `contests` they have in churches where proper words / sentences should be framed from garbled words / letters which would ideally be a verse in the Holy Bible. The one who unscrambles it first would get a five inch diameter ever-silver vessel. I still cannot think of a proper use for that vessel in a city, may be in a village before 80s, it would have had a wide usage everyday morning!

Altar was well lit with scented candles, it smelled jasmine or lavender or whatever, but it was good. The priest was walking towards altar with the altar boys leading the march holding a seven foot cross. The choir started to sing, and now I realized the garbled English was Spanish!

The priest was a plump man with lot of hair, on his head. His hairstyle resembled Elvis Presley’s! I looked at the cross and asked, “God! Why my hair?!”. What is that priest going to do with so much? I was trying to recollect the famous ‘Sermon on the Mount’ by Jesus Christ. Did He teach anything like, “Blessed are the Bald, for they shall be called Sons of God!”?. God … Why my Hair?!!

I felt a cool breeze on my plain polished ‘rock’ bald head. It felt like a cold soft hand touching my bald head. I would have shouted "Ghost!" if I was not in a church.

A thought struck as a lightning! I had always thought Jesus did not have any sense of humor, but now I realized that he had the best and he was the best! Jesus said, “You are Peter, and on this ‘rock’ I will build my Church, ....”. The word ‘rock’ caught me. May be Peter was as bald as me, and may be, Jesus winked after saying this and none noted it down!

Suddenly, I heard a voice asking , “Bless you son …… and did you feel my touch?”. Was I hallucinating? I did not know. I still believe it was Gods voice. I was in joy. I had my answer at that instant, “God loves bald people more, may be because he could touch their heads easily when he blesses!”.

The heavenly touch. It all came in a flash, rain drops falling, cool breeze blowing, sun shining, children playing tabla, easier to wash crow shit and more, on my bald head! Everything looked simple and meaningful now. Indeed, it was a Heavenly touch! It is really hard to understand God. May be one in the Trinity is bald and uses a hairpiece. Who knows? God only knows!

A day sans romance, never a day at all!

Yes, I was already in Love with the girl sitting next to me. In church, you fall in Love. You have to, else, why do you think Jesus Christ died on the Cross? It was for Love and Love alone!


Looking at her I imagined reciting the following poem to her:

“Chubby cheeks, dimpled chin.
Rosy lips, teeth within.
Curly hair, very fair.
Eyes are blue, lovely too.
Teachers pet My Sweet Heart, is that you?”

And she would say:

“Yes! Yes! Yes!”


Call me childish, I don’t care!
I call it romanticism.

What makes you hate this universe and forget the lovely girl sitting next to you in a church?!
Sermon!

The plump priest began to speak and sleep caught me. I fought, but I could not win.
Devil!

I knew I was dreaming. She was sitting next to me and holding my hand. No, not the girl who was actually sitting next to me! She shouted in my ears, “Wake up!!”.
Angel!

I opened my eyes, but my ears were still blocking Spanish. I realized that the Holy Mass had progressed to the part where we show the sign of peace to each other. Folks standing in front of me, probably married couples, gave a hug and a kiss on lips … on lips?!! Wonderful! In India, a traditional “vanakkam” is the sign of peace. This is the first time I saw a hug and a kiss inside a church. I don’t know if God hanging on the cross feels for the sin we commit, but I am sure He did feel for that kiss!

What is difficult in hugging and kissing someone you know, to show the sign of peace? Why can’t they show the same love and say peace to a stranger? Wouldn’t the world be a better place for everyone if that happened? Why can't people hug and kiss a stranger to say that ‘I love you or peace be with you’? Why can't we do it when Jesus did it ? Why can’t I be the stranger to that girl? There are many questions for which we can never find an answer, even in Gods house!

From left, the fat lady gave me a handshake and said something in Spanish, probably “peace be with you”. When I turned to the sweet Chubby girl on my right …. I hated God!!

Did I snore when I was sleeping? What did I do, oh God!? I dint see the girl, instead a tall fat man was smiling at me. He shook my hand, gave a hug and said something in Spanish, his words did not match with the fat lady’s! I shouted …."Get off me dude, I know who you are."…in silence !!

The mass ended, I knelt and closed my eyes to pray. I knew all the angels were looking at me and laughing at what had happened. I realized God was there and he was really funny! He had talked to me today. He made me feel good about being bald.

I opened my eyes and turned to my left, the fat lady was gone. I turned to my right, the fat gay dude was gone.

I saw Chubby walking towards me, she knelt beside me … I looked at her … She looked at me … and said, “Hi, my name is … “.

I believed in God.

- Robert Williams RM

Photograph :
Title : Candles in a Church
Place : Kodaikanal
by Robert Williams RM

Saturday, August 23, 2008

wat are you doing ?

## what are you doing here ?
<< i dont know !

## are you alive ?
<< yes, i am !

## do you live here ?
<< yes i do ! for the last 5 years i have spent more time browsing the internet. i kind of live here.

## dont you get bored ?
<< i do.

## what do you do when you get bored ?
<< i do dumb things that are interesting.

## then you do interesting stuff when you get bored, correct ?
<< yes, i miss being bored !

## what are you going to do after typing this ?
<< i will type what i am typing ... er ... typed ... what the ? ... i am bored to death !

## so whats the next dumb thing that you are going to do ?
<< sleep. it would be interesting for the next 6 hours with someone in my dream !

## someone ?
<< a Girl.

## dance ?
<< sure.

## music ?
<< just guitar.

## place ?
<< beach, sunset / moon rising / a waterfall!

## about the girl ?
<< if you are a girl then welcome to my Dream!
if you are a guy then get lost!

-wills