வா என்று அருகில் அழைத்தாய்.
உன்னருகில் நான் வர,
தீண்டவா வேண்டாமா
என நீ தயங்கிப் போக,
உன் தயக்கம் கண்டு நான் விரைய,
முகம் பார்த்தாய்
சிரித்தாய்,
பாதம் தொட்டாய்
மெல்ல தழுவினாய்,
உதட்டில் முத்தமிட்டாய்
உயிரோடு கலக்கசசொன்னாய்
காதிலே 'காதல்' என்றாய் !
என்னை அள்ளிகொண்டாய்
உன்னில் மூழ்க வைத்தாய,
நிகழ்காலம் மறக்கச்செய்தாய்
உயிரின் சோகம் கரைத்தாய்,
வாழ்வின் ஏக்கம் தீர்த்தாய்
உன்னுயிர் குடிக்கச்செய்தாய்
என்னுள் சென்றாய் !
தத்தளித்தேன்,
நீந்தினேன்,
சுவாசிக்க துடித்தேன்.
உனக்காக மறித்து,
கதைகளில் வாழ ஆசை இல்லை.
விட்டு விடு அழகே
கரை சேர்த்து விடு உயிரே
நம் காதல் வாழ்வதற்கே!
மௌனம்,
பின் அலையின் ஓசை.
கரையில் மிதந்தேன்
காதில் "காதல்" என்றாய்!
என் இமை திறக்க,
நீ அலையாய்,
தழுவினாய், அன்பாய் !
கடலே
அற்புத அழகே,
உனக்கும் எனக்கும்
ஒருதலைக்காதலே உன்னதமானது !
- இராபர்ட் வில்லியம்ஸ்
புகைப் படம் : இராபர்ட் வில்லியம்ஸ்
இடம் : "சரசோடா கி" கடற்கரை, ப்ளோரிடா