என்னுள் இருப்பவளே,
என்னை விட்டு வெளியே வா !!
என் இதயத்தை வதைத்தது போதும்,
என்னை விட்டு வெளியே வா !!
என் சிந்தனைகளை சிதைத்தது போதும்,
என்னை விட்டு வெளியே வா !!
என் எழுதுகோளின் வழியாக வா !!
சிறு கவிதையாக வா !!
ஒரு கதையாக வா !!
பெரும் காவியமாக வா !!
கற்பனை கடலாக வா !!
இன்னொரு காதலாகவும் வா !!
-வில்ஸ்